Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 JAN 1936
இறப்பு 22 APR 2021
அமரர் நாகரத்தினம் கனகசபை
வயது 85
அமரர் நாகரத்தினம் கனகசபை 1936 - 2021 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானை தொட்டலடியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, ஜேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம் கனகசபை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு நான்கு போனாலும்
அழும் நெஞ்சம் ஆறவில்லை
களங்கமில்லா உனதன்பும்
என்றும் புன்னகைக்கும் உன் பாங்கும்
பூந்தோட்டமாய் பூரிப்பாய்
மனம் இதமாக பேசுவாயே!

முற்பிறப்பில் செய்த தவம்
 இப்பிறப்பில் உனைக் கண்டோம்
 இப்போ கண்களுக்கோ எட்டவில்லை
கருத்திலும் கனவிலும் நிழலாடுகிறாய்
ஆனாலும் அருகினிலே நீயில்லையே அம்மா

 ஆறுதலைப் பரிமாறி எம் மனதை
ஆற்றிட துணையின்றித் தவிக்கின்றோம்
 உற்ற நண்பியென உனை நட்புறவும் தேடுதம்மா
 இனி இப்பிறப்பில் மட்டுமல்ல ஜென்மம்
என ஒன்றிருந்தால் நீயே வேண்டுமம்மா!

தகவல்: குடும்பத்தினர்