பாலா அண்ணா!! என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அண்ணா மிகச்சிறந்த சமூகப்பற்றாளர் ,மிக்க ஆளுமையான மனிதர் என்றால் மிகையாகாது. 1985 காலப்பகுதிகளில் எமது தேசத்தில் நடைபெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக கொழும்பு நோக்கி தன்னுடைய குடும்பநலனுக்காக தனதுகனவை சுமந்து சென்றவர். அங்கு சென்று தனது கடின உழைப்பினால் முன்னேறி தனது குடும்பத்தை மட்டுமல்ல 1990... களின் காலப்பகுதியில் இருந்து எமது தேசத்தில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக எமது மக்கள் இடம்பெயர்ந்து கொழும்பு நோக்கியும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கும் சென்று கொண்டிருந்தார்கள். அவ் மக்கள் அவரிடம் சென்று உதவிகோரியபோது எவ்விதமான தயக்கமும் இல்லாமல் மிகவும்நெருக்கடியான சூழ்நிலைகளில்கூட தனது உயிரைக்கூட பொருட்படுத்தாது தன்னலமன்றி அவர்களுக்கு உணவு உறைவிடம் கொடுத்து பாதுகாப்பாக நிலைபெறச்செய்தவர். பல நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பாக புலம்பெயர்ந்து வெளிநாடு செல்வதற்கு தூணாகநின்றவர். ஆனால் காலன் அவரை விரைவில் தத்தெடுத்து விட்டான். அன்னாரின் பிரிவினால் துயருறும் மனைவி,பிள்ளைகள்,உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.