யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 6 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் பாலச்சந்திரன் அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புதல்வனும், காலஞ்சென்ற முத்துலிங்கம், பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சகானா, கஜானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவளபாக்கியலெட்சுமி, சண்முகநாதன், இந்திராணி, சரசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜகோபாலன், நாகலெட்சுமி, விமலன், அமரர் யோகநாதன், அமரர் ஜெயரூபன், அமரர் ஜெயகரன் மற்றும் ஜெயதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபனா, சஜித்தா, சுதாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சர்மிளா, சாந்திகா, உமாபிரியதர்சினி, திருஈஸ்வரன், பாலகிருஸ்ணன், காலஞ்சென்ற காண்டீபன், இந்துமதி, பொன்மதி, லோகிதா, சுபோதினி, சாட்சாஜினி, தர்சினி, பிரியதர்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
"அட்டாலும் பால்சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார், நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்"
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details