யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 6 ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம்பிடித்த நாள் முதல் இறுதிவரை
இணைபிரியா வாழ்வதனை வாழ்ந்தோம்
யார் கண் பட்டதுவோ யான் அறியேன்
சிரித்துப்பேசி எனை ஏமாற்றிச் சென்றதேனோ..?
இருந்த இடம் தேடி தினம் புலம்புகின்றேன்
ஆண்டொன்று ஆனாலும் மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா
அன்பையும் பண்பையும் காட்டி வளர்த்தீர்களே!
உங்கள் நினைவுகளை மட்டும்
விட்டு விட்டு சென்றுவிட்டீர்களே!
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது அப்பா!
என்றென்றும் எங்களின் இதயத்தில்
இருப்பீர்கள் அப்பா!
உங்களின் பாத அடி தொடர்ந்து செல்வோம்
உங்களின் நினைவுகளோடு...
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!