திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் நாகராசா ஸ்ரீகாந்த் (Chief Excise Inspector- OIC) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நினைவுகளில் நீங்கா அன்பு
ஆண்டு ஒன்று சென்றும்
அகலவில்லை
எங்கள் துயரம்
கண்ணின் இமையாய்
எமைக் காத்த தெய்வமே,
அன்புத் துணையே!
மனம் கனத்து வழிகிறது
உங்கள் நினைவுகளால்.
ஆறாத துயரில் நாங்கள் தவித்திருக்க
ஆறா அமுதமாய் இருந்த தெய்வம்
வாழ்வு முழுதும் உங்கள் மணம்
அன்பு
மனம் தேடுகின்றேன்
எங்கு சென்றீரோ...
இல்லை என்பதில் என்ன இருக்கிறது.
இருந்த நீங்கள் இல்லையென்று போனபோது
இருப்பதெல்லாம் இல்லாமாகி
இடிந்துபோய் இருக்கிறோம் நாங்கள்.
"இன்னும் நூறாண்டு சென்றாலும்
உங்கள் நினைவு மாறாது"
என்னும்
உங்கள் தந்தையும்
பெரியம்மா
சித்திமாரும்
கண்ணீரில் நனையும் சகோதரிகளும்
எண்ணித் தவிக்கும்
அண்ணனும் தம்பியும்
உறவினர் சுற்றமும்
அம்மாவுடன்
விண்ணிலிருந்து
எம்மை ஆளும்
தெய்வமாய்
உங்களை போற்றுவோம்...
தெய்வமாய் உங்களை போற்றுவோம்...
காலம் மாறும்
கனிவாக வாழ்ந்த
உங்கள் அன்பு முகம்
என்றும் மாறாது.
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, மகன், அப்பா,
சகோதரிகள்,
உறவினர்கள், நண்பர்கள்.
**In Loving Memory of My Best Friend** Today marks one year since you left us, but your memories remain deeply alive in my heart. We became friends from the very first day we met at the University...