

திதி: 10-03-2025
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி 7ம் யுனிற் கல்மடுவை வதிவிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராசா மகாலட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நகர்ந்தாலும்
நம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் அம்மா
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர்
முழுநிலவு போன்ற முகம்
முன்வந்து கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோம்
உங்களை நினைக்காத நொடிகளில்லை
இங்கு வாரத்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கின்றோம் அம்மா
கனவில் நீங்கள் வரும் பொழுது
தேடுகின்றேன் நீங்க வருவீங்க என்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றோம் தனிமையில் இன்று
கடைசிவரை இருப்பீர்கள் என்று
மறந்துவிட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டீர் எங்களை விட்டு
எங்கள் கனவை கலைத்து விட்டான்
காலன் உங்களைக் கவர்ந்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிராத்திக்கின்றோம்....
அன்னாரின் அஸ்த்தியை 05-03-2025 புதன்கிழமை அன்று நயினாதீவு கங்காதரணி புனித தீர்த்தத்தில் கரைத்துவிட்டு, பின்னர் ஆத்மா சாந்தி பிராத்தனையும், முதலாம் ஆண்டு பூர்த்தி நினைவுநாளும் 10-03-2025 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
முகவரி:
No 699, 7th Unit
Kalmadunagar
Kilinochchi
Srilanka.