
யாழ். சங்கானை முருகமூர்த்தி வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா ஜெய்கரன் அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ”சிற்பக்கலாஜோதி” நாகராஜா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தவராஜா, ரேவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாளினி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீன், நேத்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரன், கவிதா, பிரதீபன், கல்பனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லிசா, அரவிந், கீர்த்தனா, நிர்மலராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதா, நேத்திரா, சிவஷக்தி, விஷாகன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
கஸ்வின் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2019 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தச்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our Deepest sympathy .