Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 19 NOV 1967
மறைவு 18 JAN 2024
அமரர் நாகராசா கோகுலராஜன்
முன்னாள் விவசாயப்போதனாசிரியர், பழைய மாணவன் யாழ் இந்துக்கல்லூரிஉயிரியல் பிரிவு 1986
வயது 56
அமரர் நாகராசா கோகுலராஜன் 1967 - 2024 கச்சேரியடி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா கோகுலராஜன் அவர்களின் நன்றி நவிலல்.

நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்...!

கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள் நிஜம் தானா
என்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?

உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!

நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரியுதப்பா !!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது சென்றதனால்
தீராது சோகமப்பா!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 30 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.