யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், சாவகச்சேரி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகநாதர் கணபதிப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-09-2024
குடும்பம் என்னும் கோயினிலே
மனை சிறக்க வாழ்ந்த எங்கள் அப்பாவே
ஆண்டுகள் ஐந்து போனாலும்
அழியாது நம் சோகம் மீளாது எம் துயரம்
உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்தவரை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் இதயங்களில் இருந்து
உங்கள் ஞான ஒளி அணையாது!
உரிமை சொல்ல எத்தனை
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்ற உறவுக்கு யாருமே நிகரில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.