யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், சாவகச்சேரி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகநாதர் கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம்தான் போனாலுமே
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே !
ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறைந்து விடவில்லை நீங்கள்
எம் மனங்களில் மறையாது
என்றும் மனங்களில் வாழ்வீர்கள் ஐயா
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
நயினை நாகபூசணி அம்பாளை பிரார்த்திக்கின்றோம்!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்