திதி: 11-12-2025
யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்டிருந்த நாகமுத்து சேனாதிராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
ஓராண்டு அல்ல
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும் வரை
உங்கள் நினைவிருக்கும்!
அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் 1ம் ஆண்டுத்திதி11-12-2025 வியாழக்கிழமை அன்று வத்தளையில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our deepst condolences, We miss him a lot, From Ravichandran and family