2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகம்மா நடராஜா
வயது 74

அமரர் நாகம்மா நடராஜா
1945 -
2020
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
51
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா நடராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:18/05/2022
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
இரண்டு ஆண்டுகள் சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நித்தமும் வாழ்கின்றீர்கள்!
பாசமாய் எம்மை வளர்த்த
அழகான சொத்தே...
சொல்லாமல் பிரிந்தீர்களே
திரும்ப முடியாத பாதையில்!
காலங்கள் உருண்டோடலாம்
ஆனாலும் கண்முன்னே நிழலாடும்
உங்கள் நினைவுகள்
ஒருபோதும்
எம்மைவிட்டு அகலாது!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நிழலின் நிஜத்தைத்தேடி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்