யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திராமாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் தர்மலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசம் நிறைந்த முகம்
பரிவு காட்டும் அன்பு மனம்
நேசம் நிறைந்த நெஞ்சம்
மீள நினைக்கின்றோம் உம்மை
வாசம் நிறைந்த மலர் போல
வளம்மிக நிறைந்த நிலம் போல
தேசம் புகழ வாழ்ந்த
தெய்வத் திருமகனே, உங்கள்
பாதம் பணிகின்றோம், எமை
பரிவுடன் காத்திடுவீர்!
உழைப்பிற்கு இலக்கணமாய்
உண்மைக்கு உரைகல்லாய்
களைப்பின்றிச் செய்யும் செயலை
கவினுறவே செய்த செம்மல்
ஆதாரமாய் எமக்கிருந்த எம்
அன்புத் தெய்வமே
நீதூரம் சென்றாலும் எம்மை
நெஞ்சிருத்திக் காப்பீரே!
எல்லாமாய் எமக்கிருந்த
எங்களன்புத் தந்தையே!
நல்லவராய் வல்லவராய்
நம்மை வளர்த்தீரே
கல்வி, கேள்வி முதல்
கற்றோர் கேண்மை வரை
சொல்லித் தந்து, உங்கள்
சுடர் பரப்பி நிற்கச் செய்தீர்!
நீள நிலைக்க வைத்த எம்
நெஞ்சார்ந்த தெய்வமே!
வாழ வழிகாட்டி, உம்மிடம்
வந்தோர்க்குக் கைகாட்டி,
தோழமையாய்த் துலங்கி நின்ற
தூயாவரே உமைத் தொழுதோம்
நாளும் எமைக் காப்பீர் என்றே
நாமிரந்து வேண்டுகின்றோம்
Our deepest condolences to Mama family; we miss you Mama. Rest in peace. From Suganthy Family - Toronto, Canada