யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தெய்வத்திரு நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
குடும்பத்தின் குலதெய்வமே
பாசத்தின் உறைவிடமே அப்பா!
நீங்கள் எம்மை விட்டுப் போய்
நாட்கள் 31 ஆனதே
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
கடல் ஏழும் கடந்திடக் காணாத்தூரம்
எமை விட்டுவிலகிச் சென்றீரோ
உடல் வாழும் காலமெலாம் மறவா வண்ணம்
உமை நினைந்து கலங்க வைத்தீரோ
குடல் சூழும் பசியினும் கொடிய பிரிவினை
இமை மூடி எமக்குத் தந்தீரோ
எங்களின் இதய தெய்வமே,
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எமை விட்டு நீர் இறைவனடி சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் சாட்டி புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று பின்னர், 21-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:00 மணிமுதல் அவரது இல்லத்தில் சபிண்டீகரண கிரியையும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நடைபெற உள்ளதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வருகை தந்து ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
75/17, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம்.
Please accept our heartfelt condoleances. We are deeply sorry for the loss.