Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 08 AUG 1944
இறைவன் அடியில் 19 MAY 2021
சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள்
இணுவில் கந்தன், ஈஞ்சடி வைரவர், உடுவில் கற்பக விநாயகர், சிற்பனை முருகன், குப்பிளான் கற்கரை விநாயகர் ஆலய பிரதமகுரு
வயது 76
சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள் 1944 - 2021 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.     

ஆண்டுகள் 5 உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்பு முகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்

அப்பா என்ற வலிமையை நீங்கள் இல்லாத
காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள் தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!

உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
பூப்பூத்த வதனமாய் இருந்துகொண்டே இருக்கும்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices