1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 08 AUG 1944
இறைவன் அடியில் 19 MAY 2021
சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள்
இணுவில் கந்தன், ஈஞ்சடி வைரவர், உடுவில் கற்பக விநாயகர், சிற்பனை முருகன், குப்பிளான் கற்கரை விநாயகர் ஆலய பிரதமகுரு
வயது 76
சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள் 1944 - 2021 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தந்தையே..!!
 ஆண்டு ஒன்று ஆனாலும் அழியவில்லை
எம் சோகம்! மாதங்கள் பன்னிரண்டு
என்ன யுகங்கள் பதினெட்டு ஆனாலும்
 மாறாது எம் துயர் மறையாது உங்கள் நினைவு!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
 நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
 இன்பம் தரும் தங்கள்
இனியசொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

மனம் உருகும் உங்கள் குரலையும்
 மனம் கவரும் உங்கள் சிரிப்புச்
சத்தத்தையும் மறுபடியும் கேட்கமாட்டோமா..?
ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும்
 எங்கள் அப்பாவுக்கு ஈடாகுமா..?

நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம்
 சென்றாலும் உங்கள் அறிவுரைகள்
 அரவணைப்புகள் என்றும் எங்கள்
 நெஞ்சங்களில் உயிர்வாழும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மனைவி ,மக்கள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள்.

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 19 May, 2021
நன்றி நவிலல் Wed, 23 Jun, 2021