நன்றி நவிலல்
பிறப்பு 08 AUG 1944
இறப்பு 19 MAY 2021
சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள்
இணுவில் கந்தன், ஈஞ்சடி வைரவர், உடுவில் கற்பக விநாயகர், சிற்பனை முருகன், குப்பிளான் கற்கரை விநாயகர் ஆலய பிரதமகுரு
வயது 76
சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள் 1944 - 2021 இணுவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள் அவர்களின் நன்றி நவிலல்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரிவார்
குறள் 101-

எமது குடும்பத்தின் தலைவனை பாசமிகு உறவாய் அன்பின் இறையாய் வாழ்வின் நல்வழிகாட்டியாய் வாழ்ந்த எங்கள் உயிர் தெய்வம்

அமரர் சிவஸ்ரீ நடராஜ குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள் அவர்கள் சிவபதம் அடைந்த செய்தி அறிந்தவுடன் வந்து எமது துயரில் பங்கேற்று உதவிகள் புரிந்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், மருத்துவர்கள், வைத்தியர்கள், தாதிமார்கள், பயண உதவி செய்தவர்கள், அரச ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள், சுகாதார நிறுவன அங்கத்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து உதவி செய்தவர்கள், தொலைபேசி, சமூக வலைதளம் மூலமாக தொடர்பு கொண்ட இலங்கை, இந்தியா, லண்டன், கனடா, நோர்வே, அவுஸ்திரேலியா, டென்மார்க் , ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அனுதாபம் கூறி பதிவேற்றியவர்களுக்கும் மற்றும் பத்திரிகையில் அனுதாபத்தை தெரிவித்தவர்களிற்கும், பண உதவி பொருள் உதவி விஷய ஆலோசனை உதவி செய்தவர்கள். செய்தி அறிந்ததில் இருந்து உணவு சமைத்தும் கொடுத்ததும், உணவிற்கு ஏற்பாடு செய்த வவுனியா பிராமண ஒன்றியம் உதவி செய்தவர்கள், உற்றார்கள், ஊர்மக்கள் அனைவருக்கும். எமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, மக்கள், மருமக்கள், பேரன், பேத்திகள், சகோதரர்கள், மைத்துனர்கள், மைத்துனிகள், பெறாமக்கள்....


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.