35ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராசா சசிவண்ணன்
வயது 18

அமரர் நடராசா சசிவண்ணன்
1970 -
1988
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சசிவண்ணன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரே எங்கள் உயிர் ஓவியமே
அலையும் அடித்து ஓய்ந்ததப்பா
காற்றும் வீச மறந்ததம்மா
கடவுளும் கருணையின்றிப் போனானே
நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
மதுரமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
இன்றெமைக் கலங்க விட்டதேனோ...!
என் செய்வோம் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை
போன திசை எது என்று தெரியாது....?
இளமையில் எமைப் பிரிந்தாய்
இதயத்தில் நிறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!
எங்கும் நீ நிறைந்தாய்
எதிலும் நீயே நிறைந்தாய்
எங்களின் கண்களில் - நீர் நிறைத்து
நிஜத்தில் ஏன் மறைந்தாய்?
எங்களின் இறுதி மூச்சு உள்ளவரை
உன்னை நினைந்திருப்போம் எம் செல்வமே....
தகவல்:
குடும்பத்தினர்