

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சசிவண்ணன் அவர்களின் 34ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவிளக்கின் ஒளிக்கீற்றே
அணைந்தாய் நீ இன்று இருளாச்சே
ஆயிரம் கனவுடன் நீ நடந்தாய்
இன்று பாதியில் ஏனடா நீ முடித்தாய்?
உன் மோகனப் புன்னகையில் கண்பட்டதடா
இந்த மண்ணின் வாழ்வில் மனம் புண்பட்டதா?
நம்பிய மனமிங்கே வெடிக்குதடா
சாமி கும்பிட்ட மனமிங்கு தவிக்குதடா
போகின்ற வயதென்று யார் சொன்னார்
உன்னை வாவென்று அழைத்தாலும் ஏன் சென்றாய்?
விதியென்று சொல்லியழ முடியவில்லை
வேறு வழியென்ன எங்களுக்குப் புரியவில்லை
ஆறாய் விழிநீரும் ஓடுதடா செல்வமே
கண் அன்பின் பிறப்புன்னைத் தேடுதடா
ஓலை எடுத்து யமன் பார்த்தானோ?
ஒரு நொடிப்பொழுதில் உனைக் கவர்ந்தானோ?
வசந்தம் உன் வாழ்வில் வரும் வேளை
சடுதியில் கண்முடிப் போனதெங்கே?
காற்றில் கலந்தாய் என்று
காலம் சொல்லிப் போனது
இனி உந்தன் குரல் கேட்காமல்
இந்தக் காற்றும் மௌனமாகும்
வலி நிறைந்த இழப்பின் மேலே
விழி நிறைந்து கண்ணீர் இறங்கும்
கண்மணிக்குள் கனவுகள் சுமந்தவனே
இனியுன்னை எங்கு காண்போம்
வலிக்குதையா எம் இதயம்
ஏன் இன்று விழிமூடிக்கொண்டாய்
அன்பு சசிவண்ணனே நீ எங்கும் செல்லவில்லை
வீசும் காற்றில். எங்கள் மூச்சில். பேச்சில்
என்றும் நிறைந்திருப்பாய்
உன் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுகின்றோம்