

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சசிவண்ணன் அவர்களின் 33ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆதி அந்தமில்லாக் காலவெள்ளம்
பாதிவழி உன்னை கூட்டிச்சென்றதேனோ!!
கண்களை இமை காப்பது போல நாம்
காத்து வந்த எம் செல்ல மகனே!
வலி தாங்க முடியாமல் நாம்
வாழ்நாள் முழுவதும் துடித்து நிற்கின்றோம்!
தேம்பியழுகின்றோம் துணையாருமின்றி
உன் மணக்கோலம் காணத்துடித்தோம்
நீயோ பூக்கோலம் கொண்டு
மறைந்த மாயம் என்னவோ!!
வளர்ந்து வந்த வழி மாறி
நீ எங்கே சென்றாயடா!
விதி விளையாட கூட்டி சென்றதோ!
தாய் தவிக்கிறாள்
உடன் பிறந்தோர் துடிக்கிறோம்!
நீ மீண்டும் உதிர்த்து வருவாயென
உன் உடன் பிறப்புக்கள் ஏங்குகிறோம்!
தேடியும் கிடைக்காத செல்வமடா- நீ
பிரிவின் பின்னரும் - இன்னும் எங்கள் கண்களில்
இருந்துகொண்டு தான் இருக்கிறாய்
வடிந்தோடும் கண்ணீராக அல்ல - எங்கள்
கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய்...!!!
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்.