6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நடராசா புவனேஸ்வரி
1930 -
2020
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராசா புவனேஸ்வரி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடலில் சுமந்து உதிரத்தை உணவாய் ஊட்டி
உன் உயிரை பகிர்ந்து என் உருவம் தந்தாயே அம்மா!
இன்று எம் உடலும் உயிரும் உன்னையே
அழைக்கின்றது அம்மா அம்மா என்று
வாழும் காலத்தில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த எங்கள் தெய்வமே!
ஆறாண்டு காலம் உருண்டோடி விட்டது
நம்ப முடியவில்லை
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே!
ஏங்குகிறோம் உங்கள் பாசத்திற்காக!
கள்ளமில்லா சிரிப்பும் கனிவான உங்கள் பேச்சும்
வார்த்தைகள் கொண்டு நாம்
வர்ணிக்க முடியாதவை அம்மா!
ஆண்டு ஆறு சென்றாலும் ஆறாது எங்கள் மனம்
கண்ணீர் பூக்களால் காணிக்கை செய்து
உங்கள் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்