Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 08 MAR 1938
இறப்பு 05 SEP 2023
அமரர் நடராஜா பொன்னரியம் 1938 - 2023 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பொன்னரியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மாதம் ஒன்று போனாலும்
அழும் நெஞ்சம் ஆறவில்லை
களங்கமில்லா உனதன்பும்
என்றும் புன்னகைக்கும்
உன் பாங்கும் பூந்தோட்டமாய் பூரிப்பாய்
மனம் இதமாக பேசுவாயே!

முற்பிறப்பில் செய்த தவம்
இப்பிறப்பில் உனைக் கண்டோம்
இப்போ கண்களுக்கோ எட்டவில்லை
கருத்திலும் கனவிலும் நிழலாடுகிறாய்
ஆனாலும் அருகினிலே நீயில்லையே

அம்மா ஆறுதலைப் பரிமாறி
எம் மனதை ஆற்றிட
துணையின்றித் தவிக்கின்றோம்
உற்ற நண்பியென உனை நட்புறவும் தேடுதம்மா

இனி இப்பிறப்பில் மட்டுமல்ல
ஜென்மம் என ஒன்றிருந்தால்
நீயே வேண்டுமம்மா மலர்களையே நேசிப்பாய்
இப்போ எங்கே நீ மலர்ந்திருப்பாய்!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.  

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.