

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா பொன்னரியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் முகவரியே அம்மா
மனிதருள் மாணிக்கமே மாசில்லாத் தங்கமே
தியாகத்தின் உருவமே மகத்தான தாயே
பொறுமையின் சிகரமாய் நீ இருந்தாய் தாயே
கொடைதனிலில் கோபுரமாய் நீ நின்றாய் தாயே...!
வருடம் இரண்டு சென்றதம்மா உன்குரல் கேளாது
அன்பு காட்டி எமை அரவனைத்து
புன்னகைத்த வண்ணம் உறவுகளோடு
உறவாடி நீ நின்றாய் தரணியிலே
நாங்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்கு
உன்னை உருக்கி எமை வளர்த்தெடுத்தாய் தாயே..!
நீ அணைந்து போனதால் நம் இல்லம்
இருளாகி போனதம்மா உனை இழந்து
நாமெல்லாம் உருகுந்து போகிறோமே
வலியோடு தவிக்கிறோம் உன் நினைவோடு எந்நாளும்
எத்தனை பிறப்பிலும் உங்களுக்கு பிள்ளைகளாய்
பிறந்திட இறைவனை வேண்டி - உம் ஆத்மா
சாந்தியடைய வணங்குகிறோம்
நன்றி தாயுனக்கு..
சாந்தி...சாந்தி...சாந்தி...
Our deepest sympathy and prayers to your family. May her soul rest in peace.