
யாழ். ஊராங்குனை வடக்கு குப்பிழான் கற்கரைப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Eschborn ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராசா மகாலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்!
அப்பா என்ற வலிமையை நீங்கள் இல்லாத
காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய் இருந்துகொண்டே இருக்கும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அமரர் நடராசா மகாலிங்கம் அவர்களின் சிவபதப்பேறு குறித்த 1ம் ஆண்டு வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதால், அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கற்கரை பிள்ளையார் கோவிலடி,
குப்பிளான் வடக்கு,
ஏழாலை.
Rest in Peace Periyappa