1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
23
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சிறிகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவலை!
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
உங்கள் குரலை மீண்டும் ஒருமுறை கேட்போமா?
விதி எழுதிய விதிப்புரை
புரியாமல் வாழ்ந்து விட்டோம்
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம் ...
அன்பு காட்டுவதில் நல்ல கணவனாய்
அரவணைப்பதில் நல்ல தந்தையாய்
சமூகத்தில் நல்ல மனிதனாய் வாழ்ந்த
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் நினைவுகளே நகர்த்துகிறது
எங்கள் வாழ் நாட்களை....
உங்கள் ஆத்மசாந்திக்காக வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
வளர்மதி(மனைவி)