Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 12 MAY 1940
ஆண்டவன் அடியில் 25 JUN 2021
அமரர் மயில்வாகனம் பொன்னம்பலம்
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்
வயது 81
அமரர் மயில்வாகனம் பொன்னம்பலம் 1940 - 2021 கரணவாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

 யாழ். கரணவாய் வடக்கு பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை யாமா வளவை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பொன்னம்பலம் அவர்கள் 25-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(இளைப்பாறிய ஆசிரியர்- மகாஜனாக் கல்லூரி), தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாதேவி(இளைப்பாறிய விரிவுரையாளர்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, ஆசிரியை- மகாஜனாக் கல்லூரி மற்றும் நடேஸ்வராக் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற கந்தையா - மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மைப்பிள்ளை - பத்மநாதன் மற்றும் பரமேஸ்வரி - திருச்சந்திரன், தர்மகுலசிங்கம் - நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வெற்றிவேலாயுதம்- காலஞ்சென்ற செல்வமலர், அம்பிகாதேவி- பரமநாதன், சயதேவி - காலஞ்சென்ற செல்வராஜன், சகுந்தலாதேவி - சத்தியபாலன், லோகபாலினி - சிறீரங்கநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(சட்டத்தரணி), கந்தையாப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற தங்கரட்ணம் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2021 சனிக்கிழமை அன்று யாமா வளவு, தெல்லிப்பழையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலாதேவி பொன்னம்பலம் - மனைவி
சயதேவி செல்வராஜன் - மைத்துனி
மயில்வாகனம் தர்மகுலசிங்கம்(துரை) - சகோதரன்
பரமேஸ்வரி திருச்சந்திரன் - சகோதரி
லோகபாலினி சிறீரங்கநாதன் - மைத்துனி

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 25 Jul, 2021