யாழ். நாரந்தனை கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ஜெயானந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே உம்
அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா
நீ இறையடி எய்து 31 நாட்கள்
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
கடமைகள் நிறைவு கண்டு – இன்று
காலமோ ஒன்பது ஆண்டு ஆனது – என்று
போறது கதி தான் மோட்சம்
பெற்றது நீங்கள் எனினும்
பாசத்தில் பரிதவித்தோம்
பரமமே தகுமோ ஐயா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 25-05-2026 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் Waldmeisterstrasse 26 8953 Dietikon எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Waldmeisterstrasse 26
8953 Dietikon.
Dearest Mama, You are one of the kindest and most genuine people I’ve met on Dinesh’s side of the family. Even though we didn’t speak often, I always appreciated the little moments we...