யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொலண்ட் Breda வை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துவேலு தனபாலசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
மூன்று ஆண்டுகள் ஆன போதும்
உங்களை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உங்கள் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!
என்றும் நீங்கள் கலங்கரை விளக்காக இருந்து
எமை வழிநடத்துவீர்கள் என்று நம்புகின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...