யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொலண்ட் Breda வை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துவேலு தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-01-2023
எங்கள் அன்பு அப்பாவே
 இதயத் துடிப்பின் அருமருந்தே
 காலம் செய்த கோலத்தினால்
 ஒவ்வொரு கணப்
பொழுதும் 
துடிக்கின்றோம்!
ஆண்டொன்று ஆனாலும்
 மனம்
 ஆற மறுக்கிறது- அப்பா
 புன்னகை புரியும் உங்கள்
 முகம்
 தெரிகிறது தினம் தினம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
 மதிப்புகள் யாவும் எங்கள்
 வாழ்வில் என்றென்றும்
 வழிகாட்டியாக இருக்கும்!
மாதங்கள் பன்னிரெண்டு
 ஆனாலும் அழியாது எம் துயரம்
 மறையாத உங்கள் நினைவு!
 மீண்டும்
 ஒரு பிறவி உண்டென்றால்
 உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
 பேறு பெற வேண்டும்- அப்பா!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்த நீங்கள்
விண்ணோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
பல காலம் இருப்பீர்கள்! 
 சோகத்தின் சுமைதனை
சுமக்கின்றோம் இதயமதில்
பாசத்தின் உறவுகள் நாம்
பரிதவித்து வாடுகின்றோம்
நேசத்தை மறந்து 
ஏன்
நெடுந்தூரம் சென்றீர்கள்? 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!