Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 06 OCT 1938
இறப்பு 15 DEC 2020
அமரர் முத்துக்குமாரு தாமோதரம்பிள்ளை
வயது 82
அமரர் முத்துக்குமாரு தாமோதரம்பிள்ளை 1938 - 2020 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு தாமோதரம்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட முத்துக்குமாரு தாமோதரம்பிள்ளை அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 14-01-2021 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை நடைபெறும் கிரியை நிகழ்விலும், மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.