

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரு தாமோதரம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அதிகாலை சூரியனாய் ஒளிவீசி
இருந்த நீங்கள்
அர்த்தம் ஏதும் சொல்லாமல்
அஸ்தமித்தது ஏனப்பா???
அன்புக்கு அர்த்தம் சொல்லி
சிரிப்புக்கு கதைகள் சொல்லி
சிறப்பாக இருந்த உங்களை
சீண்டினான் காலன் ஏனோ???
சினக்காத நீங்கள் - எங்களை
கண்ணீர் சிந்த வைத்ததேனோ?
கனத்த மனதுடன் - கைகூப்பி கேட்கின்றோம்!
மீண்டும் ஒருமுறை - உங்கள்
திருமுகம் காணலாம் என்றுதான்...
மறுஜென்மம் என்றுண்டால்
மறக்காது வந்திடுங்கள் - எங்கள்
குடும்பத்தின் ஒளி விளக்காய்...!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
எதிர்வரும் 04.12.2021 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நண்பகல் 12 மணியளவில் ஆண்டு திவச கிரியைகள் நடைபெற இருப்பதால் நீங்கள் மற்றும் உங்கள் குடும்ப சகிதம் வந்து ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் பங்குபற்றி அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன விருந்திலும் கலந்துகோள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Please accept our deepest condolences for your family's loss