8ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
ஐப்பசி மாத பூர்வபட்ச திரயோதசி
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்து பொன்னையா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன
மூழ்குமா உந்தன் நினைவுகள்
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
எங்கள் அன்புத் தெய்வமே!
எம் குலவிளக்கு
ஒளி விட்டுப் பிரகாசிக்கும்
என நாமிருக்க
ஒளி இழந்து போனதேனோ...?
எங்கள் கனவுகளிலாவது
ஒரு தரம் வந்துவிட்டு
சென்று விடுங்கள் அப்பாவே...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
மயூரன், கமலேஸ்வரி குடும்பத்தினர்