Clicky

பிறப்பு 21 OCT 1956
இறப்பு 05 MAY 2026
திரு தியாகராஜா முத்தையா 1956 - 2026 கல்மடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vava 06 MAY 2026 France

உறவணைத்து நடந்தவரே....! வரும் தோல்வியெல்லாம் எதிர்த்து வேள்வி செய்து மகிழ்வித்த மாமாவே….! கால்வலித்தும் கண்வலித்தும் ஓய்வெடுக்காது உழைத்தவரே......! உலகமெல்லாம் நாம் உயர்ந்து எரிய- உருவத்தையே எமக்காய் கரைத்தவரே.....! இன்று கண் மூடிய பின்னும் கவிதையாய் சிரிக்கின்றீர் விண் கேட்க அழுகின்றோம் ஏன் மெளனமாய் இருக்கின்றீர் சின்ன சின்ன ஞாபகங்கள் எல்லாம் பெரும் மழையாய் பொழிகிறது மாமா…! அள்ளி அணைத்த பூக்கரங்கள் ஏன் இன்று விறகுகளாய் கிடக்கிறது மாமா….! சொல்லி சொல்லி வளர்த்த கதைகள் மனதுக்குள்ளே பேரொளியாய் ஒலிக்கிறது மாமா கிள்ளி கொஞ்சும் உங்கள் கிளி பேச்சு இன்றேன் மெளனமாய் வலிக்கிறது மாமா உயிர் கொடியில் பூக்க வைத்து- பயிர் கொடியை மருமக்களை எல்லாம் சிரிக்க வைத்து ஊர் வாழ்வை அலங்கரித்து உலகெல்லாம் சிறக்க வைத்து பார் போற்ற வாழ்ந்து பரமனடி சரண் அடைந்ததேனோ மாமா….! ஒவ்வொரு செயலிலும் உங்கள் முகம் தெரிய ஒவ்வொரு நிகழ்விலும் உங்கள் அகம் ஒளிர ஒவ்வொரு கணமும் நேற்று வரை ஒளிமயமானதே.....! ஒவ்வொரு நொடியும் கண்ணீர் கரைய ஒவ்வொரு உறவும் உங்கள் கதைகளை நிறைக்க - இன்று உயிரை கண்ணீர் கடத்தி போகிறதே உயிருக்குள் தீயை கொளுத்தி போகிறதே....! நித்திய வாழ்வில் நிறைந்த ஓய்வு பெற்று சத்திய சக்தியில் முக்தி பெற்று பக்தி மார்க்கத்தில் பவளக் குழந்தையாய் மீண்டும் பிறந்து- நாங்கள் சுத்தி வந்து தோளேற வேண்டும் உங்களில் அமர்ந்து ஆதலால் மாமாவே காத்திருப்போம் —-! அதுவரை ஒவ்வொரு நாளும் பூவாய் பூத்திருப்போம் மாமா….!!! 🙏ஓம் சாந்தி🙏 மருமக்கள் குடும்பம் - [ Vava& nagulan family]