3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா மரியநாயகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அதிகாலை சூரியனாய்
ஒளிவீசி
இருந்த நீங்கள்
அர்த்தம் ஏதும் சொல்லாமல்
அஸ்தமித்தது ஏனப்பா???
அன்புக்கு அர்த்தம் சொல்லி
சிரிப்புக்கு கதைகள் சொல்லி
சிறப்பாக இருந்த உங்களை
சீண்டினான் காலன் ஏனோ???
சினக்காத நீங்கள் - எங்களை
கண்ணீர் சிந்த வைத்ததேனோ?
கனத்த மனதுடன் - கைகூப்பி
கேட்கின்றோம்!
மீண்டும் ஒருமுறை -
உங்கள்
திருமுகம் காணலாம் என்றுதான்...
மறுஜென்மம் என்றுண்டால்
மறக்காது வந்திடுங்கள் -
எங்கள்
குடும்பத்தின் ஒளி விளக்காய்...!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Rest In Peace