1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு யோகேஸ்வரன்
வயது 56
அமரர் முருகேசு யோகேஸ்வரன்
1966 -
2023
யாழ். கரவெட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 02-10-2024
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, பிரான்ஸ் Noisy- le- Grand ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு யோகேஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா! அன்புக்கு உருவம் நீங்களப்பா!
எங்களை விட்டு நீங்கள்
எங்கு தான் சென்றீர்களோ?
ஆண்டு ஒன்று ஆகிவிட்டதப்பா
உங்கள் அன்பு முகம் பாராமல்
நாங்கள் கலங்கித் தவிக்கின்றோம்!
ஆலவிருட்சம் போல் கிளைகளைப் பரப்பி
எங்களை எல்லாம் தாங்கி நின்றவரே!
இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை
உங்கள் நினைவுகளும் எங்கள் உள்ளத்தில்
வற்றாத ஊற்றாகப் பொங்கிப் பெருகும்!
உங்கள் வாழ்வின் சிறப்புகளை
எங்கள் மனதில் நிலை நிறுத்தி
உலகம் உங்களைப் போற்றும்படியாக
நாங்கள் மண்ணில் வாழ்வோம்!
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
உளமுருகி இறைவனிடம் வேண்டுகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்