யாழ். புத்தூர் நிலாவரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சிவகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டு ஆண்டுக்ள கடந்தாலும் உனது நினைவு நாடி
ஈர விழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்
எனது மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்....
என்னுள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்
உனக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடு...
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்...
உடன்பிறப்பே எங்கள்
உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே
எமது அருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி எங்கள்
கண்கள் களைத்ததையா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எமது உடன்பிறப்பே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...