
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் இரத்தினம் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சண்முகராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
முருகேசு தங்கம்மா பெற்ற மூத்த மகனாக,
அடுத்துப்பிறந்த நான்கு சகோதரிகளுக்கு அண்ணனாக,
உற்றார் சுற்றத்தார், சகலருக்கு இனியனாக,
வாலிபத்தில் உருத்திரபுர ஊரில்
விளையாட்டுத்துறையை வளர்க்கும் திறனாளனாக,
கலைமானியாக பட்டயம் பெற்று,
ஆசிரியராக, அதிபராக, கோட்டக் கல்வி அதிகாரியாக,
உதவிக் கல்விப்பணிப்பாளராக,
சமாதான நீதிபதியாக மைத்துனிக்கு
கணவனாக மூன்று பெண்கள்,
இரு ஆண்கள் என
இனிய பிள்ளைகளை பெற்று ஆளாக்கி மருமக்கள்
பேரர் என்று சந்ததிவழி பெருமைகளையும்
பெற்றவராக 66 ஆண்டுகள்
பூவுலக வாழ்வில் பொலிந்தவரே!
பெருமைகளை பெற்றவரே, பிள்ளைகள், மனைவி,
சகோதரர், உறவுகள் சுற்றம் என்ற
பெருமையை தந்த எந்தையே!
அப்பா அண்ணா! மைத்துனா!
மாமா! தாத்தா! மாஸ்ரர்!
நீங்கள் மறைந்து ஆண்டுகள் 10ஆகி என்ன?
எம் இதயத்தில் என்றென்றும்
மறையாது வாழ்கின்றீர்கள்....
My friend training college kilinochchi-1979 my name is ,