1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முருகேசு இராஜசிங்கம்
பருத்தித்துறை Boat Mechanic, நவிண்டில் Boss ஐயா
வயது 85
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரணவாய் மத்தி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு இராஜசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஓடி மறைந்ததையா உங்கள்
அன்பு முகம் காணாது துடிக்கின்றோம்
காலங்கள் உருண்டோடி விட்டதையா
கண்ணிமைக்கும் பொழுதினிலே எல்லாமே
முடிந்து போனதையா
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது
ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தபின் எம் மனம் கலங்குகிறது
எம் நெஞ்சுக்குள் வாழும் உங்கள்
நினைவுகள் எப்போதும் எம்
நெஞ்சை விட்டுப் போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
our deepest condolence to Sritharan and your whole family from sivakumar croydon