6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு நடராசா
பொறியியலாளர், S.V.M நிருவனப்பணிப்பாளர்
வயது 66
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் களபூமி விளானைப் பிறப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு நடராசா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
நினைவுகளில் மறையாது நியத்தில்
மறைந்துவிட்ட எங்கள் அன்பானவரே
கனவிலும் நினைவிலும் உங்கள் துயர் வாட்டுகிறது
எங்கள் துயர் எழுதுவதற்கு
உங்கள் முகவரியை தேடுகிறோம் ஐயா
கிளையோடு ஒட்டிய உறவுகளை முடித்து
ஊட்டம் கொடுத்த பூமியோடு
உறவாட சென்றீர்களா?
அன்பின் வானம் நீங்கள் அதற்கு
ஒரு முடிவிலியும் நீங்கள் ஐயா!
மலைபோல் வாழ்க்கை அமைக்க
நீங்கள் பட்ட கஷ்டங்களை நினைக்கையில்
கண்ணீர் தான் வருகிறது
காலம் இழப்பின் காயங்களை
மாற்றும் என்ற நம்பிக்கையுடன்
ஆண்டுகள் கடந்தாலும் நீங்காத நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய நாளும்
இறைவனை வணங்குகிறோம்..!
தகவல்:
குடும்பத்தினர்