யாழ். காரைநகர் களபூமி விளானைப் பிறப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், வீட்டுக்கிருத்திய அழைப்பும்.
எம் சிந்தைகொண்டு சிதறும் சந்தமே..!
நீண்ட விருட்சம்நீர் நீண்டு விரிந்தீர்!
நிழல்கூட நீர் நிறையவே தந்தீர்
நினைக்கவில்லை நீர்
இப்படி பிரிவீர் என்று- உம்
நினைவுகள் எம் நிம்மதி
கெடுத்து எமக்கு- உம்
நினைவுகளை கொடுத்து-எம்
நித்திரை கெடுத்து
நித்தமும் நினைவில்
நிறைந்து எம் மனம் வாட
எங்கு போனீர் உம் போக்கிடம்
தேடி அனுதினம்
பொழுதினை கெடுத்து- தேடும்
உம் உறவை அறிவீரோ
அற்புத உறவே
எமை ஆண்டு அமிழ்ந்தீர்
ஆயினும் எமக்காய் அழுவீர்
உமக்காய் அழவில்லை- உம்
அடி தேடுகின்றோம்- அழ
அல்ல உமை வணங்க
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லோரும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 04:30 மணியளவில் கொழும்பு முகத்துவாரம் மண்டபத்திலும் வீட்டுக்கிருத்தியை அவரது இல்லத்திலும் நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து 25-11-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இல. 75, லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் எனும் முகவரில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.