அப்பாவை இழந்து அண்ணாவை இழந்து அம்மாவையும் அருந்தங்கையையுமிழந்து
அனைத்துக் கவலைகளையும் உள்ளடக்கி
அன்புடனும் பண்புடனும் அழகாகப் பேசி
அண்ணன் தம்பி தங்கைமார் யாவர்க்கும்
அவர்கள் நலன்கருதி முன்நின்று நடந்தநீ
அன்புடைய மனையாளை பண்புடைய
அருமையான பிள்ளைகளை சரியாகவும்
அழகாகவும் வழிநடத்தி வாழ்ந்த நீ -இன்று
அமைதியாய்ப் படுத்ததேனோ! - தம்பி நீ
அமைதியாய்ப் படுத்ததேனோ!!
உன்னை நினைக்கையிலே
உள்ளம் குமுறுதடா!
உற்றார் உறவினர்கள்
உற்ற நண்பரெல்லாம்
உன் புன்முகம் காணாமல்
உழன்று அழுகின்றார்!
உழன்றுழன்று அழுகின்றார்!!
அம்மா போகையிலே
அனைவரும் சேர்ந்து நின்று
அழகாய் அனுப்பி வைத்தோம் - இன்று
அன்புத்தம்பி நீ போகையிலே
அண்ணன்மார் ஒருவரையும்
அழைக்காமல் போய்விட்டாய்!
அனுப்ப நாம் வராமற் போய்விட்டாய்!!
யெகநாதா இந்த யெகத்தினை
யெயித்து நீ போய்விட்டாய்! - இந்த
யெகத்தில் நாம் வாழும்வரை
யெகநாத தயா உன்தன் ஆன்மா
இறைபதம் அடைய வேண்டி எந்நாளும்
இறைவனை நாம் வேண்டிடுவோம்!
இறைவனை நாம் வேண்டிடுவோம்!!
ஓம் சக்தி! ஓம் விளுவளை அம்மனே!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!