யாழ். எழுதுமட்டுவாள் விழுவளையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Biella வை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு ஜெகநாதன் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்திவிட்டார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நல்லம்மா தம்பதிகளின் அருமை மகனும், தம்பையா பத்மாதேவி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
விஜியலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கஜீபா, கௌசிகா, மார்பின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சத்தியநாதன், சிவநாதன், தவநாதன், மஞ்சுளா, காலஞ்சென்ற சியாமளா, சர்மிளா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயராணி, பகவதி, சந்திரலேகா, நந்தகுமார், தெய்வேந்திரம், சற்குணராசா, ஜெயலட்சுமி, ஸ்ரீகரன், மகாலட்சுமி, மனோகரன், ரூபலட்சுமி, வரதலட்சுமி, கீதலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திலகவதி, கலாரஞ்சன், ஜெயமாலா, மகேஸ்வரன், அஜந்தா, சேயோன், வசந்தன், செந்திமயூரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியையின் பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.