யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகதாஸ் திருமாலினி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உடன்பிறப்பாய் எங்கள் வாழ்வில்
வந்த உறவே,
உள்ளம் முழுவதும் அன்பை நிறைத்த சொந்தமே!
31 நாட்கள் கடந்தும் உன்
நினைவுகள் மறையவில்லை,
உன்னை இழந்த வலிகள் இன்னும் குறையவில்லை.
உன் சிரிப்பும் பேச்சும் மனதில்
ஒலிக்கின்றன,
நாம் பகிர்ந்த நாட்கள் நினைவுகளாய்
வாழ்கின்றன.
சின்னச் சின்ன சண்டைகளும்
இனிய தருணங்களும்,
இன்று கண்ணீருடன் நினைக்கும்
பொக்கிஷங்களாகின்றன.
உடன்பிறந்த பாசத்திற்கு
பிரிவென்பது ஏது?
உன் நினைவுகளை மறக்க எங்கள்
மனதிற்கு முடியாது.
காலங்கள் கடந்தாலும் உன் அன்பு
மாறாது,
எங்கள் இதயத்தில் உன் இடம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி ஆத்மசாந்தி பிரார்த்தினை 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.திருமாவளவன், இல:40, திருவள்ளுவர் வீதி, உக்குளாங்குளம் வவுனியா எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மதியபோசணம் நடைபெறும். அதுசமயம் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.