

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி, பிரான்ஸ் Ivry-sur-Seine, Limeil-Brévannes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மூத்ததம்பி மார்க்கண்டு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:-04/09/2025
அப்பா....!!!
உங்கள் நினைவுகளால் நிரப்பிக்கொண்ட இடமும்,
உங்களை முன்னொட்டாய் கொண்ட
பொருளுமாய்,
தட்டுத்தடுமாறிய நாட்களை நாங்கள் கடக்கிறோம்...
கூட்டிலிருந்து விழுந்த குஞ்சாக
இழப்பின் தள்ளாமையில் நிற்கிற அம்மாவை
எமக்கிருக்கும் உங்களின் மிச்சமாய் போற்றிக்கொள்கிறோம்.
பேரப்பிள்ளைகளோடு அளவளாவும்
உங்கள் அன்பை எண்ணி
தலைமுறை இடைவெளிகள் மறந்து போகிறோம்.
ஒவ்வொரு நாளையும் எட்டும் முயற்சிகளில் எல்லாம்
படத்திலிருக்கும் உங்கள் பார்வையில் சக்தி பெறுகிறோம்.
உழைப்பிலும் களைப்பிலும் நீங்கள்
எங்களோடிருப்பதாய் உணர்வு கொள்கிறோம்.
உடனிருந்த தோழமையில் உருவாகி
உடன்பிறந்த உறவாக
நீங்கள் வரித்துக்கொண்ட
உறவுகளை உங்கள் நினைவோடு பேணி மகிழ்கிறோம்.
வேகமான நடையோடு வீதியில் கடக்கும்
தொப்பிபோட்ட மனிதரில் ஒருகணம் உங்களை தேடினாலும்
அப்புவோடும் ஆச்சியோடும் ஆண்டவன் மலரடியில்
நீங்கள் ஆத்மசாந்தி பெறும் இறை நம்பிக்கையோடு நாங்கள்...
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
இறைவனடி சேர்ந்து அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்