வியாகுல மாமரியின் மைந்தனை நித்தம் உச்சரித்த உதடுகள் இன்று உணர்விழந்துபோனதோ--- வருந்தி சுமைசுமப்போரே என்னிடம் வாருங்கள் என்றவரின் வாசல்தேடி நீ சென்றதனால் வாசகம் கொண்ட பதுவையாளரின் ஆலயம் பொலிவிழந்து நிற்கின்றது அண்ணனே--- உன் இறையிசையை இவ்வுலகம் மட்டுமா கேட்டது --- வானத்திலிருந்து வையகம் எழுந்த புனித ஆவி வரையல்லவா ஒலித்தது--- உன் உச்சஸ்தாயின் உரத்த அலைக்கற்றைகள் எம் மூச்சை ஒருகணம் மூழ்கடித்து நிற்குமே--- புதுமையாளரின் புகழ்பாட நீ போடும் புதுமெட்டு ஒளிர்ந்து நிற்கும் மெழுகுவர்த்தியைகூட உற்சாகப்படுத்தி ஊஞ்சலாடவைக்குமே--- கண்ணியத்தின் காப்பாளனாய் -- கட்டியவளின் கண்கண்ட கணவனாய் -- மரியாதைக்குரிய மனிதனாய் --- காலமெல்லாம் கடும்சொல் உச்சரிக்காத பதுமையாளனாய்-- நற்பிள்ளைகளின் நாடுபோற்றும் தந்தையாய்--- என்றும் அடிவானில் அமிழ்ந்தபோய் அஸ்தமிக்கும் ஆதவன் மீண்டும் அவதரிப்பதுபோல் அமிர்தநாதர் என்னும் நீங்கள் அழியாவரத்துடன் வாழ்வீர்கள்.
அருட்திரு கிளமென்ற் இன்பநாதன் அவர்களின் பாசமிகு தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் உறவுகளுடன் நாமும் துயர் பகிர்வதுடன் அன்னார் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....