யாழ். பருத்தித்துறை அந்தோனியார் பதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி ஒஸ்னாபுறூக்கை வதிவிடமாகவும் கொண்ட மிக்கேல்பிள்ளை அன்ரனி அமிர்தநாதர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு புல்லாங்குழல்
இசைப்பதை நிறுத்திக்கொண்டது
இசையும் உனக்கு இசையுமே?
நீ கீர்த்தனை -
நாம் பிரார்த்தனை
இனியார் துணை?
நெடுதூரம் என்றாலும்
தொடுதூரம் தான்
அப்பாவின் கரம்பிடித்து
நடந்த நாட்கள்.
எங்கள் சுவாசக் காற்றே
விழிநீர் வடிய தேடுகிறோம்
குரல் கேட்க துடிக்கிறோம்.
உயிர்மூச்சான அப்பா!
எல்லையில்லா அன்பிற்கு
நீங்கள் தான் வரையறை.
கல்லறையில் வைக்கவில்லை
எங்கள் நெஞ்சறையில்
புதைத்துவிட்டோம்
நினைவாய் இருப்பதற்கு.
அன்னாரின் பிரிவு செய்தி கேட்டு எமது இல்லத்திற்கு வருகைதந்து, எம்
பெருந்துயரில் பங்கெடுத்தவர்களுக்கும், தொலைபேசியூடாகவும் சமூகவலைத்தளங்கள்
மற்றும் RIP Book ஊடாகவும் தங்கள் கண்ணீர் அஞ்சலிகளை கவிதைகளாக எழுத்துக்களில்
பதிவுசெய்து எமக்கு ஆறுதல்கள் அனுதாபங்கள் தெரிவித்த அன்பு நெஞ்சங்கள்
அனைவருக்கும்,
பருத்தித்துறை அந்தோனியார் ஆலயத்தில் இறுதியஞ்சலி நாளில் இரங்கல் திருப்பலி
ஒப்புக்கொடுத்த அருட்தந்தையர்களுக்கும்,
அன்னாரின் இறுதியஞ்சலி திருப்பலியிலும் நல்லடக்கத்திலும் கலந்து கொண்டு
மலர்வளையங்கள், மலர்மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை சகல உதவிகளையும் செய்த அனைவருக்கும் எமது
குடும்பத்தின் சார்பாக இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
அருட்திரு கிளமென்ற் இன்பநாதன் அவர்களின் பாசமிகு தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் உறவுகளுடன் நாமும் துயர் பகிர்வதுடன் அன்னார் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....