யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Mettingen ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த மேவின் ஜோசெப் ராசநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டு ஆண்டு ஆயினும் ஆறாத எம் துயரங்கள்
வலிகளை சுமர்ந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்
என் ஆயுட்காலம் முழுவதுமாய் உம்மோடு
செலவழிக்க எண்ணினேன்
இன்றோ நீர் இல்லாமல் என் ஒவ்வொரு நொடியும்
கண்ணீரில் கடக்கின்றது!
கண்களில் எம்மை சுமர்ந்தீர் கணப்பொழுதில்
எம்மை விட்டு கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உம்மை போல் யார் வருவார்
எம்துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்..
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
வானுலகம் சென்றாலும் எம் வழித்துணையாவும்
என்றும் இருந்துவிடுவீர்கள்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, மகன்,
மருமகள், பேரப்பிள்ளைகள், சகோதரி.
்எங்கள் பாடசாலையில் ஒன்றாக கல்விபயின்ற சக மாணவன் மேர்வின் உங்கள் மரணசெய்தி அறிந்து மிகவும் துன்புற்றேன். உன் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன். மேர்வினின் மனைவிக்கும் அன்பு மகனுக்கும்...