

யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Mettingen ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த மேவின் ஜோசெப் ராசநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்னுயிரில் கலந்தவரே
உம் பிரிவு எனை என்றும்
வாட்டி இங்கு வதைக்குதய்யா
உன் துணை போல்
உலகில்
யாருக்கும் கிடைத்தில்லை
நான் உம்மை நினைத்து
இங்கு தவிக்கிறேன்
எம் உயிருக்கும் மேலானவரே
உம் நினைவோடு நீர் மறைந்து போனபின்பும்
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து
பேராறாய்
பெருகுதய்யா மடைதிறந்து!
நிலைக்காத மனித வாழ்வு
நிலைக்கவில்லை எம் தந்தைக்கும்
ஆனால் அவர் நியாயமான எண்ணங்கள்
வாழும் அவர் உறவுகளில்
அப்பா
உறவுகளின் அன்பிற்கும்
உயிரான அன்பிற்கும்
உணரமுடியா பாசமிது!
உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்னும் பெருகுதையா!
நாம் மறந்திடா உம் எண்ணங்கள் எத்தனை எத்தனை
உறங்குங்கள் இறைவனடியில் உறங்குங்கள்
உமக்காக நாம் வேண்டுகிறோம்!!
்எங்கள் பாடசாலையில் ஒன்றாக கல்விபயின்ற சக மாணவன் மேர்வின் உங்கள் மரணசெய்தி அறிந்து மிகவும் துன்புற்றேன். உன் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன். மேர்வினின் மனைவிக்கும் அன்பு மகனுக்கும்...