செத்தனள் என்று செப்பிட முடியா அற்புதம் உந்தன் வித்தகம் அறிந்தவர்கள் நாங்கள் ...! உத்தமி உந்தன் பிரிவால் பெரிதும் வாடுகின்றோம் அன்பு மகளே...! உன் புன்னகையை இழந்து நடக்கின்றோம் ஒவ்வொரு அடியும் - உன்னையே நினைவூட்டுகிறது மகளே ...! உன்னைப் போல் தன் குடும்பத்தை தினம் நேசித்தவர்கள் யாருமில்லை ...! தொடுவதுபோல் தெரிகின்ற வானம் என்றுமே சமுத்திரத்தை தொடுவதில்லை...! மறைவதுபோல் தெரிகின்ற கதிரவன் என்றுமே கடலுக்குள் செல்வதில்லை...! தேய்வதுபோல் தெரிகின்ற நிலவு என்றுமே உண்மையில் தேய்வதில்லை ...! தொலைவினிலே தெரிகின்ற கானல் நீர் என்றுமே தாகத்தைத் தணிப்பதில்லை ...! தொடர்வதுபோல் தெரிகின்ற துயரங்கள் என்றுமே வாழ்வில் நிலைப்பதில்லை ...! தொடவுமில்லை...! மறையவுமில்லை...! தேயவுமில்லை...! தொலைவினில் நின்று எங்களைப் பார்க்கின்றாள் கவலை களையுங்கள்....! உங்கள் துயரினைக் களையுங்கள் அருகினில் நின்று தொடர்ந்து வந்து எங்களை ரசிக்கின்றாள் ...! இழந்தோம் என்று நினைக்கவில்லை சற்றேனும் மனம் தளர்ந்தோமில்லை நினைவில் வளர்ந்தே செல்கின்றாய்...! மாறும் உலகில் மாற்றங்கள் ஆயிரம் ஆனாலும் என்றும் மாறாத ஒன்றாய் மனதில் தோற்றம் கொண்டுள்ள மகவே ...! என்னாளும் எம்மோடு வாழும் தெய்வமாய் உன்னை வணங்குகிறோம் உன் நினைவோடு உறவாடுகிறோம் ...! உன் ஆத்மாசாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்...! நினைவுகளுடன் இராகவனும்( றகு ) குடும்பமும் மாவிட்டபுரம்.
We are in shock of your sudden death. Your smile and lovely face will remain in our hearts forever. We pray for your soul to rest in peace.