Clicky

பிறப்பு 25 AUG 1935
இறப்பு 12 JUN 2026
திருமதி மீனாட்சிப்பிள்ளை முத்துத்தம்பி
வயது 90
திருமதி மீனாட்சிப்பிள்ளை முத்துத்தம்பி 1935 - 2026 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
We miss you Mami
Mrs Meenachippillai Muthuthamby
சித்தன்கேணி, Sri Lanka

என் அன்பு மாமியே… சிறுவயது நினைவுகளின் சித்திரத்தில் என்றும் அழியாத ஓர் அழகிய முகம் நீங்கள். வீட்டில் விசேஷ நாட்கள் வந்தாலே, எல்லோரையும் வட்டமாய் அமர வைத்து, அன்பை அன்னமாகக் குழைத்து எங்கள் கைகளில் வைத்து ஊட்டியவர் நீங்கள். அந்த அன்னத்தின் சுவை மறந்தாலும், அதில் கலந்த உங்கள் பாசம் இன்றும் நெஞ்சை நிறைத்தே நிற்கிறது. ஒருநாள் நான் துன்பத்தின் விளிம்பில் நின்றபோது, நான் செய்த உதவி மறைக்க பட்டபோது…. “நான் உன்னை நம்புகிறேன்” என்ற உங்கள் அந்த ஒற்றை வார்த்தை உடைந்த என் மனதிற்கு உயிர் கொடுத்த மருந்தானது. என் கண்ணீரைத் துடைத்ததும் நீங்கள், என் மனதைத் தேற்றியதும் நீங்கள்; என் தோள்களை வருடிய அந்த அன்புக் கரங்கள் இன்றும் என் தோள்களில் தங்கியிருப்பதாய் என் இதயம் உணர்கிறது. காலத்தின் கரங்கள் நினைவுகளை மங்கச் செய்தபோதும், உங்கள் அன்பின் ஒளி மட்டும் ஒருநாளும் மங்கவில்லை. மறதி உங்களைத் தழுவிய நேரங்களிலும், தூர தேசங்களில் இருந்து வந்த பிள்ளைகளின் குரல் கேட்டவுடன், தங்களால் முடிந்தவரை “ஆம்” என்றும் “இல்லை” என்றும் மெல்ல பதிலளித்த அந்தக் கணங்களில், தாயன்பு நினைவுகளை விடவும் பெரியது என்பதை உணர்ந்தோம். யாருக்கும் சுமையாக இல்லாமல் வாழ்க்கையை கடந்தீர்கள்; யாரையும் கஷ்டப்படுத்தாமல் விடைபெற்றுச் சென்றீர்கள். அமைதியாக மலர்ந்து, அமைதியாக மணம் பரப்பி, அமைதியாகவே உதிர்ந்த ஒரு புனித மலராக இருந்தீர்கள். இன்று நீங்கள் கண்களுக்கு மறைந்தாலும், நீங்கள் தந்த அன்பும் நம்பிக்கையும் எங்கள் இதயங்களில் நிலவொளியாய் வாழ்கின்றன. என் அன்பு மாமியே, உங்கள் நினைவுகள் மட்டும் அல்ல, உங்கள் அன்பே என்றும் எங்களோடு வாழும். கண்ணீரால் நனைந்த என் இதயத்தின் அஞ்சலி இது…

Write Tribute

Tributes